நீண்ட தூர நிலத்தடி இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ சாதனை
16 ஆனி 2026 செவ்வாய் 12:51 | பார்வைகள் : 154
நீண்ட தூர நிலத்தடி இலக்குகளை தாக்கும் ஏவுகணையான Long Range Land Attack Cruise Missile ( LRCAM) ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
ஓடிசாவின் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் சோதனை ஜூன் 15 நடந்தது. இந்த ஏவுகணையானது இலக்கை துல்லியமாக தாக்கி, சாதனை படைத்தது. இந்தியத் தொழில்துறையின் விரிவான பங்களிப்புடன் டிஆர்டிஓ அமைப்பால் வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஏவுகணையானது, சோதனையின் போது துல்லியமாக, துவக்கம் முதல் இறுதிக்கட்டம் வரை செயல்திறனை வெளிப்படுத்தியது.
எதிரி நாடுகளின் உள்ளே சென்று, முக்கியமான இலக்குகளை இந்த ஏவுகணை வாயிலாக இந்தியாவால் தாக்க முடியும். தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பின் கீழ் இந்த ஏவுகணை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை செலவுகளை குறைக்கும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்த சோதனையானது, இந்தியாவின் நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கும் திறனில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan