Paristamil Navigation Paristamil advert login

இறுதியாகிறது வர்த்தக ஒப்பந்தம்; ஜூன் 22ல் இந்தியா வருகிறது அமெரிக்க குழு

இறுதியாகிறது வர்த்தக ஒப்பந்தம்; ஜூன் 22ல் இந்தியா வருகிறது அமெரிக்க குழு

16 ஆனி 2026 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 207


வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு ஜூன் 22ம் தேதி இந்தியா வருகிறது.  

இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது என்று கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க இருநாடுகளும் தயாராகி வருகின்றன.

ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக, அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் குழுவினர் ஜூன் 22ம் தேதி இந்தியா வருகின்றனர் என்று வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;

ஜூன் 22ம் தேதி அமெரிக்க வர்த்த பிரதிநிதிகள் குழு இந்தியா வருகிறது. 23 மற்றும் 24 தேதிகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயலுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டு உள்ளது. ஒப்பந்தத்தை இறுதி வடிவம் கொடுப்பதை மையமாக கொண்டே இந்த கலந்துரையாடல் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு ராஜேஷ் அகர்வால் கூறினார்.

முன்னதாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இரு நாடுகள் இடையே பேச்சு வார்த்தைகள் சாதகமாக செல்கின்றன. ஆரம்ப கட்ட உடன்பாடு விரைவில் எட்டப்படும் நிலையில் உள்ளது என்று கூறி இருந்தது, குறிப்பிடத்தக்கது.