Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கடன் அட்டைகளுக்கு இனி TIN இலக்கம் கட்டாயம்

இலங்கையில் வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கடன் அட்டைகளுக்கு இனி TIN இலக்கம் கட்டாயம்

15 ஆனி 2026 திங்கள் 18:23 | பார்வைகள் : 218


வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மொத்தம் சுமார் 17 மில்லியன் பேர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் படி வங்கி கணக்கு திறப்பு, வாகன பதிவு, வணிக பதிவு, பங்கு பரிமாற்றம் மற்றும் கடன் அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய TIN இலக்கம் இனி இரகசியத் தகவலாக கருதப்படமாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.