Paristamil Navigation Paristamil advert login

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் மோதி வெடிக்கவுள்ளதாக தகவல்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் மோதி வெடிக்கவுள்ளதாக தகவல்!

27 தை 2022 வியாழன் 11:09 | பார்வைகள் : 15559


சில ஆண்டுகளுக்கு முன் விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் மோதி வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் தன் பணியை நிறைவு செய்ததை அடுத்து அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் க்ரே கணித்திருக்கிறார்.
 
இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும், மார்ச் மாதம் 4-ந் தேதி நிலவில் மணிக்கு 9ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை எனவும், நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறியதாகவே இருக்கும் எனவும், இது நிலவின் பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026