மாறுவேடத்தில் இளவரசர் வில்லியம் - பயந்து நடுங்கிய இளவரசி கேட்
13 ஆனி 2026 சனி 10:42 | பார்வைகள் : 548
இளவரசர் வில்லியம், மாறுவேடத்தில் செய்த ஒரு விடயம் தன்னை பயப்படச் செய்ததாக தெரிவித்துள்ளார் அவரது மனைவியான இளவரசி கேட்.
பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஒரு மோட்டார் சைக்கிள் பிரியர். ஆகவே, தான் மாறுவேடத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதுண்டு என்று கூறியுள்ளார் வில்லியம்.
2015வாக்கில், பிள்ளைகள் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது வில்லியம் இப்படி மாறுவேடத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிக்க, அது தனக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார் இளவரசி கேட்.
தன் மோட்டார் சைக்கிள் பயணங்கள் தன் மனைவியை கவலையடையச் செய்கின்றன என்பதை புரிந்துகொண்ட வில்லியம், தனது குடும்பத்தில் நலனுக்காக, தனக்குப் பிடித்த பொழுதுபோக்கான மோட்டார் சைக்கிள் பயணங்களை குறைத்துக்கொண்டாராம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan