தமிழக தேர்தல் களத்தில் ரொபோக்கள்
23 சித்திரை 2026 வியாழன் 14:36 | பார்வைகள் : 1236
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தி இளம் வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வட தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைய தலைமுறை வாக்காளர்களை வரவேற்கும் வகையில் ரொபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களை ரொபோ உற்சாகமாக வரவேற்றது. அத்துடன் வாக்களித்தவர்களுக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள், விதை பந்துகள் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வின் காணொளி இணையத்தில் வெளியாகி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan