எல்லையில் முள்வேலி அமைக்கும் இந்தியா; வங்கதேசம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
13 வைகாசி 2026 புதன் 08:37 | பார்வைகள் : 474
மேற்கு வங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு, வங்கதேச எல்லைகளில் முள்வேலி அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அந்நாட்டு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்துடன், 4,097 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கிறோம். இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் கணிசமான துாரத்துக்கு இன்னும் வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதில் நிலவிய சிக்கல்களே காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, தன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதிரடி முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, கடந்த திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த 127 கி.மீ., துார எல்லை முள்வேலி திட்டத்தை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க அரசின் இந்த அதிரடி முடிவுக்கு வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம். ஹுமாயூன் கபீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வங்கதேச மக்களோ அல்லது அரசோ இந்திய எல்லையில் அமைக்கப்படும் முள்வேலிகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை.
எல்லைப் பாதுகாப்பில் இந்தியா இன்னும் மனிதாபிமான முறைகளைக் கையாள வேண்டும். எங்களுக்கு இந்திய அரசுடன் தான் நேரடித் தொடர்பு உள்ளது. மாநிலங்களின் உள்நாட்டு அரசியலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனினும், எங்களின் தேசிய நலன் பாதிக்கப்படும்போது மவுனமாக இருக்க மாட்டோம், என, கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan