மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 63 பதக்கங்களை வென்று இலங்கை சாதனை!
10 வைகாசி 2026 ஞாயிறு 10:50 | பார்வைகள் : 221
மாலைதீவில் நடைபெற்ற 2-வது சர்வதேச சிரேஷ்ட வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று, 63 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் நாடு திரும்பியது.
இந்தபோட்டித் தொடர் கடந்த 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை மாலைத்தீவின் - மாலே நகரில் நடைபெற்றது.
இதில் இலங்கை, இந்தியா, டென்மார்க், ஜப்பான், சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட தடகள வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை அணி இந்த போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி, 31 தங்கப் பதக்கங்கள், 26 வெள்ளிப் பதக்கங்கள், 06 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 63 பதக்கங்களை வென்றுள்ளது.
வெற்றிப் பதக்கங்களுடன் இலங்கைத் தடகள அணியினர் இன்று மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான RL -112 என்ற விமானம் மூலம் மாலைதீவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan