Paristamil Navigation Paristamil advert login

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

10 வைகாசி 2026 ஞாயிறு 08:17 | பார்வைகள் : 171


தமிழகத்தில் பல்வேறு இடங்களில், நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 17 செ.மீட்டர் மழை பதிவானது

திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு 16; காக்காச்சி 14; மாஞ்சோலை 11 செ.மீட்டர் மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில், 3 செ.மீட்டர் மழை பதிவானது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

ஆரஞ்சு அெலர்ட்

eஇதன் காரணமாக, தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 12ம் தேதி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 13ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை.

விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன், கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

மே 14ம் தேதி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரியில், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' கொடுக்கப்பட்டு உள்ளது.

வெப்பம் குறையும்

சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்துார், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், நாகப் பட்டினம், தஞ்சாவூர், ராணிப் பேட்டை, வேலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 13ம் தேதி வரை, 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.