விஜயை போல் தனித்து சாதிக்க வேண்டும்: அழுத்தத்தில் ஆந்திராவின் பவன் கல்யாண்
10 வைகாசி 2026 ஞாயிறு 06:51 | பார்வைகள் : 147
ஆந்திராவில் கடந்தாண்டு ந டந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி - ஜனசேனா கட்சி - பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக தெலுங்கு தேச கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு பதவியே ற்றார்.
இதையடுத்து, துணை முதல்வராக நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பதவியேற்றார். அங்குள்ள திரை ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அவர் உள்ளார்.
கடந்த காலங்களில், தான் போட்டியிட்ட தொகுதி உட்பட ஒரே ஒரு சட்டசபை தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவிய பவன் கல்யாண், காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த தேர்தலில், ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில், 21 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு, அனைத்து இடங்களையும் பவன் கல்யாண் கட்சி பிடித்தது.
காப்பு சமூகத்தின் அடை யாளமாக பார்க்கப்படும் அவர், தன்னை எந்தவொரு ஜாதி அல்லது குழுவுடன் வெளிப்படையாக அடையாளப்படுத்தி க்கொ ள்ள மறுத்து வருகிறார் .
ஆந்திராவின் மொத்த மக்கள் தொகையில், 20 சதவீதத்தை கொண்டுள்ள காப்பு சமூகத்தினர், அங்கு அதிகபட்சமாக 60 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
இவர்களின் ஆதரவு, அரசியல் சமநிலையையே மாற்றியமைக்கக்கூடியதாக உள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள காப்பு சமூகத்தினர், ஆந்திர அரசியல் கட்சிகளின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர்.
இரு ப்பினும், வரலாற்று ரீதியாக தங்களுக்கு ஆட்சி யில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற உணர்வு இச்சமூகத்தினரிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது.
கடந்த தேர்தலில் குறைவான இடங்களில் போட்டியிட்டு தங்கள் சமூகத்தின் நலன்களை புறக்கணித்துவிட்டதாக ப வன் கல்யாண் மீது குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.
காப்பு சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இட ஒதுக்கீடு கோரினர்.
ஆனால், இது கூட்டணியில் பதற்றத்தை உருவாக்கும் என்பதால், பவன் கல்யாணால் இந்த விவகாரத்தில் குரல் எழுப்ப முடியவில்லை. இது, அந்த சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சந்தர்ப்பத்தை ப யன்படுத்தி, அங்குள்ள முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தே.ஜ., கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
காப்பு சமூகத்தினரின் நலனுக்காக, அடுத்த தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறி பவன் கல்யாண் தனித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, ஆந்திராவை அடுத்த 15 ஆண்டுகள் ஆளும் என, தொடர்ந்து கூறி வந்த பவனுக்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் கருத்து அழுத்தத்தை கொடுத்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் நடிகர் விஜயின் வெற்றி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
வரும் 2029ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் நாரா லோகேஷும் வெளியேற்றப்படுவர் என்ற முழக்கத்தை சமூக வலை தளங்களில் அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் விஜயை போல் வெற்றியை ருசிக்க வேண்டும் என விரும்பி, அதற்கான களப்பணிகளை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் விஜய் பெற்ற வெற்றி, ஆந்திர அரசியலிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan