நாளை முதல்வராக பதவியேற்கிறார் விஜய்
9 வைகாசி 2026 சனி 17:07 | பார்வைகள் : 1511
தமிழக முதல்வராக நாளை காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்கிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
போதிய ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாமல் தவெக திணறி வந்த நிலையில், பல்வேறு இழுபறிக்குப் பிறகு, திருமாவளவனின் விசிகவும், முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதன்மூலம், விஜய்க்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாலை 5 மணிக்கு 4வது முறையாக கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க விஜய் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக பட்டினப்பாக்கத்தில் இருந்து விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன், கவர்னர் அர்லேக்கரை சந்திக்க விஜய் மற்றும் கூட்டணி கட்சியினர் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், கவர்னர் அர்லேக்கர் இன்று இரவு 7.10 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதால், விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த விஜய், காரை பாதியிலேயே திருப்பிக் கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார். இது, தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், கவர்னர் அர்லேக்கரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்க்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. இதையடுத்து அவர், தன் கட்சியினர், ஆதரவு தெரிவித்த கட்சிகளின் நிர்வாகிகளுடன், கவர்னரை சந்தித்து, கடிதங்களை ஒப்படைத்தார்.
ஆட்சி அமைக்க உரிமையும் கோரினார். அவற்றின் அடிப்படையில் நாளை 10ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்கின்றனர்.
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan