Paristamil Navigation Paristamil advert login

மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

9 வைகாசி 2026 சனி 15:41 | பார்வைகள் : 253


பைசன் படத்துக்குபின் தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்காத ஜானரில் அந்த படம் உருவாக போகிறது. அதற்கான பட்ஜெட்டும் மிக அதிகம் என கேள்வி. இப்படிப்பட்ட படத்தை சொந்தமாக தனுஷ் தயாரிக்க வாய்ப்பில்லை. ஆகவே, வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி வருகிறார் மாரி செல்வராஜ். அந்த படத்தில் பட்ஜெட் பெரிது என்பது போல, தனுஷ் சம்பளம், மாரி செல்வராஜ் சம்பளம், மற்ற நடிகர்கள், டெக்னீஷியனகள் சம்பளமே 100 கோடியை தொடுகிறதாம்.

இதுதவிர படப்பிடிப்புக்கு பல கோடிகள். அந்த அளவு பட்ஜெட்டில் படம் தயாரித்தால் கண்டிப்பாக நஷ்டம் என்று கூறப்படுகிறது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த படமே அதிக சம்பளம், பட்ஜெட்டால் அந்த நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதனால் மாரிசெல்வராஜ் படத்தை அவர்கள் தயாரிப்பாளர்களா என தெரியவில்லை.

மேலும் தனியார் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து வாழை 2 படத்தை தயாரித்து, இயக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம். அது சொந்த படம் என்பதால் சின்ன பட்ஜெட், சொந்த ஊரில் படப்பிடிப்பு என தகவல். இதை முடித்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு படம் இயக்க உள்ளார். அது, இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் என்றும் கூறப்படுகிறது.