தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து! இபிஎஸ்
9 வைகாசி 2026 சனி 15:28 | பார்வைகள் : 1341
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 41 பேர் பங்கேற்றனர். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்தது. பிறகு சமூக வலைதளத்தில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது பதிவு: நடைபெற்று முடிந்த 17வது தமிழக சட்டசபை தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது அதிமுக பெயர் சொல்வதை தவிர்த்து வந்தார். தேர்தலில் திமுகவுக்கு, தவெகவுக்கும் போட்டி என்று விஜய் திட்டவட்டமாக கூறினார்.
அதுமட்டுமின்றி அதிமுக பெயரை கூறாமல் மற்றும் பலர் என்று விஜய் கூறிவதை வழக்கமாக கொண்டு இருந்தார். தற்போது அதே பாணியில் தவெக பெயரை குறிப்பிடாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan