காங். கூட்டணி முறிந்தது; லோக்சபாவில் இருக்கையை மாற்றி தாருங்கள்; சபாநாயகருக்கு திமுக கடிதம்
9 வைகாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 178
காங்கிரசுடனான கூட்டணி முறிந்துவிட்டது. எனவே லோக்சபாவில் தங்கள் இருக்கைகளை மாற்றித் தர வேண்டும் என்று திமுக குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்;
லோக்சபாவில் திமுகவைச் சேர்ந்த எம்பிக்களுக்கான இருக்கை அமைப்பில் தகுந்த மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்ளவே இக்கடிதத்தை எழுதுகிறேன். அவையில் அவர்களுடன் (காங்.எம்பிக்களை குறிப்பிடுகிறார்) அருகிலேயே அமர்ந்திருக்கும் தற்போதைய இருக்கை அமைப்பின்படி, தொடர்ந்து கடைபிடிப்பது எங்களின் உறுப்பினர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது.
எனவே, இந்த கோரிக்கையை ஏற்று திமுக எம்பிக்களுக்கு தனி இருக்கைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவையில் திமுக எம்பிக்கள், தங்கள் கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அமையும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan