விமான இரத்துகள் பெருமளவில் இருக்காது - போக்குவரத்து அமைச்சர்!
8 வைகாசி 2026 வெள்ளி 14:35 | பார்வைகள் : 2103
ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot)
"விமானங்களிற்கான எரிபொருளான கெரோசின் விலை உயர்ந்திருந்தாலும், இந்த கோடைக்காலத்தில் விமான நிறுவனங்கள் பெருமளவில் விமானங்களை ரத்துசெய்யும் நிலை ஏற்படாது.
சில நிறுவனங்களில் மட்டும் மிகச் சிறிய மாற்றங்கள்

Volotea : சுமார் 1% இரத்துசெய்தல்
Transavia : சுமார் 2% இரத்துசெய்தல்
மற்ற முக்கிய நிறுவனங்கள், குறிப்பாக Air France,பெருமளவில் இரத்துசெய்தல் எதுவும் இல்லை"
"பிரெஞ்சு மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்ய முடியும்”
கோடைக்கால விமான திட்டங்கள் முழுமையாகப் பின்பற்றப்படும்
பிரான்சுக்காரர்கள் தாங்கள் திட்டமிட்டபடி விடுமுறைக்கு செல்ல முடியும்
அதே நேரத்தில்உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பிரான்சுக்கு வர முடியும்"
என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சரின் உறுதிப்படுத்தலின்படி ,
கெரோசின்விலை உயர்வு இருந்தாலும், கோடைக்கால விமான போக்குவரத்து நிலையானதாக இருக்கும். இரத்துசெய்தல் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan