8‑மே - பிரான்சை விடுவித்த வீரத் தளபதிகள்!
8 வைகாசி 2026 வெள்ளி 11:48 | பார்வைகள் : 281
இன்று 8‑மே, இரண்டாம் உலகப் போரின் முடிவின் 80வது ஆண்டு. இந்த “வெற்றி நாள்” பிரான்சின் விடுதலையில் முக்கிய பங்கு வகித்த பல உயர்மட்ட இராணுவத் தலைவர்களை நினைவுகூரும் நாள்.

Général Leclerc (Philippe Leclerc de Hauteclocque)
பிரான்சின் விடுதலை (France libre) இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்
இரண்டாம் கவசப் பிரிவு (2e division blindée) தளபதி
1940ல் சிறையிலிருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்று ஜெனரால் -து-கோலினைச் சந்தித்தார்
ஆப்பிரிக்காவில் பிரான்சின் விடுதலை படைகளை ஒருங்கிணைத்தார்
நோர்மோந்திபோரில் பங்கேற்றார்
பரிஸ் விடுதலையின் போது நகரில் நுழைந்த முதல் பிரிவு
23 நவம்பர் 1944 அன்று ஸ்ட்ராஸ்பூர்க விடுதலை
1947ல் விமான விபத்தில் மரணம்
மரணத்திற்குப் பிறகு Maréchal de France பட்டம் வழங்கப்பட்டது
Général de Lattre de Tassigny
முதல் உலகப் போரில் Verdun போரில் போராடியவர்
இடைப்பட்ட காலத்தில் மொராக்கோவில் Rif போரில் பங்கேற்றார்
1939–45 போரின் தொடக்கத்தில் பிரான்சின் இளைய ஜெனரல்
14வது காலாட்படைப் பிரிவின் (14e division d’infanterie) தளபதி
பின்னர் de Gaulle உடன் இணைந்து விடுதலை இராணுவத்தின் (Armée de Libération) தலைவர்களில் ஒருவரானார்
அமெரிக்க படைகளை கட்டுப்படுத்திய ஒரே பிரான்ஸ் ஜெனரல்
ஜெர்மன் சரணடைவின் கையொப்ப விழாவில் இருந்த ஒரே பிரெஞ்சுத் தளபதி
போருக்குப் பிறகு இந்தோசீனாவில் பணியாற்றினார்
1952ல் மரணம்- தேசிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு
மரணத்திற்குப் பிறகு Maréchal de France பட்டம் வழங்கப்பட்டது
Général Juin
முதல் உலகப் போரின் “வீரன்” எனப் போற்றப்பட்டவர்
1914ல் Marne போரில் காயமடைந்து வலது கை பயன்பாட்டை இழந்தார்
வட ஆப்பிரிக்காவில் (துனிசியா, மொராக்கோ) நீண்ட காலம் பணியாற்றினார்
1942 வரை Vichy ஆட்சிக்கும் ஜெர்மனிய எதிர்ப்பு (anti‑allemand) உணர்வுக்கும் இடையில் குழப்பத்தில் இருந்தார்
பின்னர் விடுதலைப் படையின் முக்கிய தலைவரானார்
இத்தாலியில் "பிரான்சின் நாடு தாண்டிய பயணப்படை"யின் (Corps expéditionnaire français) தளபதி
Garigliano வெற்றி மூலம் கூட்டணிகள் ரோமுக்குள் நுழைய வழிவகுத்தார்
1952ல் உயிருடன் இருக்கும்போதே Maréchal de France பட்டம் பெற்ற ஒரே இரண்டாம் உலகப்போரின் தளபதி
Général Koenig
Bir Hakeim போரில் முதல் சுதந்திர பிரெஞ்சு படைப்பிரிவின் (1re brigade française libre) தளபதி
3,700 பிரெஞ்சு வீரர்கள், ஜெர்மன்–இத்தாலிய படைகளின் 10 மடங்கு படைகளுக்கு எதிராக வீரத்துடன் எதிர்த்தனர்.
முதல் உலகப் போரின் இறுதியில் 36e régiment d’infanterie இல் பணியாற்றினார்
பின்னர் ஜெர்மனி, மொராக்கோ, ஆகிய இடங்களில் பணியாற்றினார்
பிரான்சின் விடுதலை இயக்கத்தில் இணைவதற்காக இங்கிலாந்துக்கு ரகசியமாக தப்பினார்
Bir Hakeim மற்றும் El Alamein இரண்டாம் போரில் முக்கிய பங்கு
1944ல் de Gaulle உடன் Bayeux சென்றார்
பரிஸ் விடுதலையின் முன் பரிஸின் இராணுவ ஆளுநர் (gouverneur militaire de Paris)
Vallorbe இல் Maréchal Pétain ஐ கைது செய்தவர்
போருக்குப் பிறகு ஜெர்மனியில் பிரான்சின் ஆக்கிரமிப்பு மண்டலத்தின் தளபதி
Général Béthouart
முதல் உலகப் போரில் பல முறை காயமடைந்து Légion d’honneur பெற்றார்
இடைப்பட்ட காலத்தில் ஸ்காண்டினேவிய நாடுகளில் இராணுவ ஆலோசகராக பணியாற்றினார்
1922ல் பின்லாந்தில் இராணுவ ஆலோசகர்
பின்னர் யுகோஸ்லாவியாவில் பணியாற்றினார்
இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் அல்ப்ஸ் பகுதியில் பணியாற்றினார்
பின்னர் Norvège போராட்டத்தில் மிகப்பெரிய சாதனை
1944–45ல் பிரான்ஸ் விடுதலையில் 1வது இராணுவப் படைப்பிரிவின் (1er corps d’armée) தளபதி
1949ல் général d’armée ஆக ஓய்வு பெற்றார்
இந்த தளபதிகள்,
பிரான்சின் விடுதலையில் முக்கிய இராணுவத் தலைவர்கள்.
கூட்டணிகளின் வெற்றிக்கு தீர்மானமான பங்களிப்பு.
பிரான்சின் இராணுவ வரலாற்றில் நிலையான தடம் பதித்தவர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan