இலங்கைக்கு வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ" கிரிக்கெட் அணி!
8 வைகாசி 2026 வெள்ளி 12:15 | பார்வைகள் : 1424
இலங்கை மகளிர் "ஏ" அணியுடன் இரண்டு தொடர்களில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து மகளிர் "ஏ" கிரிக்கெட் அணியினர் 08.05.2026 வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இன்றைய தினம் அதிகாலை 12.48 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த எஸ்.கியூ.468 ரக விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர். இந்த அணியில் வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர். இத்தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று இருபதுக்கு-20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
ஒருநாள் தொடர் போட்டியானது, மே 12 - முதலாவது போட்டியும், மே 15 - இரண்டாவது போட்டியும், மே 18 - மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளன.
இருபதுக்கு-20 தொடர் போட்டியானது, மே 21 - முதலாவது போட்டியும், மே 23 - இரண்டாவது போட்டியும், மே 25 - மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளன.
இந்த அனைத்துப் போட்டிகளும் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan