சுவேந்து அதிகாரி உதவியாளர் சுட்டுக்கொலை
7 வைகாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 1235
மேற்கு வங்கத்தில் பா.ஜ., மூத்த தலைவரும், அக்கட்சி எம்.எல்.ஏ.,வுமான சுவேந்து அதிகாரியின் உதவியாளரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி, பா.ஜ., பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில், ஆட்சி அமைக்கும் பணியில் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பவானிபூரில் முதல்வர் மம்தாவை வீழ்த்திய பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளரான சந்திரநாத் ரதை, மர்ம நபர்கள் நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்யம்கிராம் பகுதியில் தன் 'ஸ்கார்பியோ' காரில் அமர்ந்திருந்த அவரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே சந்திரநாத் ரத் உயிரிழந்தார். இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan