Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் முகாம்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் முகாம்

7 வைகாசி 2026 வியாழன் 03:48 | பார்வைகள் : 264


அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சென்னை வந்தனர். நேற்று மாலை, பழனிசாமி தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்க, பழனிசாமி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் புதுச்சேரி சென்றனர். அங்கு அரியாங்குப்பத்தில் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் முட்டுக்கட்டை

இதற்கிடையே அதிமுக - திமுக கூட்டணி பேச்சு தொடர்பாக நடந்த கூட்ட விபரங்களை, ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, 'தேவையற்ற வேலையை செய்யாதீர்கள்' என கூறி, அதற்கு அவர் முட்டுக்கட்டை போட்டதாகவும் தகவல் வெளியானது.

த.வெ.க., தலைவர் விஜய்க்கு முதல்வருக்கான சிறப்பு கான்வாய் வாகனங்கள் வழங்கப்பட்டதைப் பற்றி கவர்னர் அர்லேகர் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி லோக்பவனில் நேற்று தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அப்போது, 118 எம்.எல்.ஏ.க்களின் முழுமையான பட்டியலை வழங்குமாறு கவர்னர் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பட்டியலை விஜய் சமர்ப்பிக்கவில்லை.

முதல்வருக்கான  சிறப்பு கான்வாய் வாகனங்களில் விஜய்  சென்றது கவர்னரின் கவனத்துக்கு வந்தது.

இன்னும் முதல்வராக பதவியேற்காத நிலையில், விஜய்க்கு இந்த கான்வாய் வாகனங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன?” என்று அதிகாரிகளிடம் கவர்னர் அதிருப்தி தெரிவித்துள்ளார். பதவியேற்கும் முன்பே விஜய்க்கு உச்சபட்ச பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டதுதான் கவர்னரின் அதிருப்திக்கான காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நேற்று இரவு விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் பட்டினபாக்கத்தில் இருந்து கான்வாய் வாகனங்கள் இல்லாமலேயே நீலாங்கரை வீட்டுக்கு நேற்றிரவு புறப்பட்டு சென்றார்.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க தீவிரம் காட்டிய நிலையில், விஜய்க்கு வழங்கிய கான்வாய் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டது, முக்கியத்துவம் பெற்றுள்ளது.