Bayern Munich-PSG போட்டி: Champs-Élysées பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு!! மெட்ரோ நிலையங்கள் மூடல்!!
6 வைகாசி 2026 புதன் 18:30 | பார்வைகள் : 3118
Bayern Munich மற்றும் PSG அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இரண்டாம் கட்ட போட்டியை முன்னிட்டு, சாம்ஸ்-எலிசேஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் பல மெட்ரோ நிலையங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுகின்றன.
பிஎஸ்ஜி அணி Munichஇல் (Allianz Arena) விளையாடினாலும், பரிஸில் உள்ள ரசிகர்கள் அணியை உற்சாகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றபோது Champs-Élysées பகுதியில் பெரிய கொண்டாட்டங்கள் நடந்தன; ஆனால் சில விபத்துகளும் பதிவாகின.
இரவு 8 மணி முதல், Argentine, George V (Metro 1) மற்றும் Trocadéro முதல் Charles de Gaulle Étoile (Metro 6,Metro 2, RERA) உள்ளிட்ட பல மெட்ரோ நிலையங்கள் மூடப்படும். ரயில்கள் இந்த நிலையங்களில் நிற்காது, மாற்றுச் சேவைகளும் வழங்கப்படமாட்டாது. காவல் துறை அனுமதி கிடைத்த பிறகே அவை மீண்டும் வியாழக்கிழமை காலை மட்டுமே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெரிய அளவில் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Champs-Élysées, Concorde மற்றும் Parc des Princes பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர், ட்ரோன்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் பணியில் ஈடுபடுவார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan