15 பில்லியன் யூரோக்கள் முதலீடு – 7,000க்கும் மேற்பட்ட நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமேசான் நிறுவனம்!!
6 வைகாசி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 2691
அமெரிக்காவின் Amazon நிறுவனம் பிரான்சில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 பில்லியன் யூரோக்களுக்கு மேற்பட்ட முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 7,000க்கும் அதிகமான நிரந்தர (CDI) வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடு புதிய லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் அமைத்தல், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வலையமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக Eure-et-Loir, Oise, Rhône மற்றும் Haut-Rhin பகுதிகளில் புதிய விநியோக மையங்கள் திறக்கப்பட உள்ளன.
2026ஆம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Illiers-Combray மற்றும் Beauvais நகரங்களில் தலா 1,000 வேலைகளும், Colombier-Saugnieu பகுதியில் 3,000 வேலைகளும் உருவாகும். மேலும் 2027ஆம் ஆண்டின் இறுதியில் Ensisheim பகுதியில் புதிய மையம் திறக்கப்பட்டு 2,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த முதலீடு பிரான்சில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடாகும் என Amazon தெரிவித்துள்ளது. இதன் மூலம் விரைவான விநியோகம், குறைந்த விலை, பரந்த பொருட்கள் தேர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு ஆகிய பலன்கள் கிடைக்கும் என நிறுவனத்தின் பிரான்ஸ் பொது மேலாளர் Jean-Baptiste Thomas தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan