பிறப்பு விகிதம் சரிவு: பிறப்பு விடுப்பு, குழந்தை பராமரிப்பு உறுதி செய்ய பரிந்துரை!!
5 வைகாசி 2026 செவ்வாய் 18:42 | பார்வைகள் : 1819
பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதனை சமாளிக்க சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் அவசியம் என உயர் மட்டத் திட்டமிடல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. பிறப்பு விகிதத்தை உயர்த்த, சிறந்த ஊதியத்துடன் கூடிய “பிறப்பு விடுப்பு” (congé de naissance) திட்டத்தை வலுப்படுத்தவும், குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதிகளை (garde) உறுதி செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, தந்தையர் விடுப்பு எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் ஒரு மாத ஊதிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டத்தின் கீழ், தாய் மற்றும் தந்தை இருவருக்கும் தலா இரண்டு மாதங்கள் வரை கூடுதல் ஊதிய விடுப்பு வழங்கப்படும். இது குடும்ப பொறுப்புகளை சமமாகப் பகிர உதவும் என கூறப்படுகிறது.
மேலும், ஒரு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பராமரிப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு பிரான்சில் 6,44,000 பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன; இது 2010இன் உச்ச நிலையை விட சுமார் 25% குறைவாகும். பிறப்பு எண்ணிக்கை இறப்புகளை விட குறைவாகும் இந்த நிலை தொடரக்கூடும் என்பதால், வேலை நேரம் அதிகரித்தல், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார குடியேற்றம் போன்ற தீர்வுகள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம் என அறிக்கை தெரிவிக்கின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan