Paristamil Navigation Paristamil advert login

பொது மருத்துவர் கைது! பாலியல் வன்முறை குற்றச்சாட்டு!!

பொது மருத்துவர் கைது!  பாலியல் வன்முறை குற்றச்சாட்டு!!

5 வைகாசி 2026 செவ்வாய் 15:55 | பார்வைகள் : 1526


இவ்ளின் (Yvelines) மாவட்டத்தில் பணியாற்றும் 60 வயதான ஒரு பொது மருத்துவர், மே 4 திங்கட்கிழமை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று Versailles பொதுச்சட்டத்தரணி அலுவலகம் தெரிவித்துள்ளது.

20 ஆண்டுகளாக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள் 2002 முதல் 2022 வரை நடந்ததாக பல பெண்கள் புகார் அளித்துள்ளனர். குறைந்தது ஐந்து பெண்கள் புகார் அளித்துள்ளதாக காவல்துறை மூலங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செயல்கள் மருத்துவப் பணியின் போது நடந்ததாகக் கூறப்படுவதால், இது சட்ட ரீதியாக பாரிய குற்றச்சாட்டு .

சட்டப்படி, அவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படுகிறார்.

விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

விசாரணை Yvelines காவல்துறையின் பிராந்திய குற்றப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது, சம்பவத்தின் விவரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை

வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கான உதவி எண் : 3919

3919 — Violence Femmes Info

பிரான்சில் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கான தேசிய உதவி எண் 3919, இலவசம், பெயரில்லாமல் அழைக்கலாம்

இது, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, உளவியல் வன்முறை, கட்டாய திருமணம், பாலியல் தொல்லை போன்றவற்றுக்கான உதவி கேட்டு உதவுதல், தகவல் வழங்குதல், ஆதரவு அமைப்புகளுக்கு வழிநடத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது

இதை தேசிய மகளிர் ஒற்றுமைக் கூட்டமைப்பு FNSF (Fédération Nationale Solidarité Femmes)நிர்வகிக்கின்றது.