ஹார்முஸ் நீரிணையை கடந்த மெர்ஸ்க் கப்பல் - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய திருப்பம்
5 வைகாசி 2026 செவ்வாய் 16:42 | பார்வைகள் : 507
ஹார்முஸ் நீரிணையை மெர்ஸ்க் கப்பல் கடந்து இருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய திருப்பமாக காணப்படுகின்றது.
டென்மார்க்கின் பிரபல கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெர்ஸ்க்(Maersk) அமெரிக்க ராணுவத்தின் நேரடி பாதுகாப்பு உதவியுடன் தனது வணிக கப்பலை ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க செய்துள்ளது.
மத்திய கிழக்கில் கடல் வழி போக்குவரத்தை பாதுகாக்கும் வகையில் திங்கட்கிழமை அன்று இந்த கடல் வழி பயணம் வெற்றிகரமாக நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்ஸ்க் நிறுவனம் இது தொடர்பாக தெரிவித்த கருத்தில், கப்பல் பாரசீக வளைகுடாவை கடக்க அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM) வெளியிட்டுள்ளது.
அதில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு கப்பல்கள் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புடன் கடந்ததாக CENTCOM அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan