Paristamil Navigation Paristamil advert login

இரு நாட்களுக்கு போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

இரு நாட்களுக்கு போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

5 வைகாசி 2026 செவ்வாய் 15:31 | பார்வைகள் : 500


உக்ரைனுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் 2 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் அடைந்த மிகப்பெரிய வெற்றியை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் 2026 ம் ஆண்டு மே 8 மற்றும் 9ம் திகதிகளில் வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ளது.

வெற்றி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இரண்டு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவானது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைனும் கடைபிடிக்கும் என்று நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அத்துடன் இந்த போர் விடுமுறையை ரஷ்யா தனது பலத்தை பெருக்கி கொள்ளவும், தந்திரோபாய சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும் ரஷ்யா முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதனால் மே 9ம் திகதி பிறகு ரஷ்யா தாக்குதலை மேலும் விரியமாக முன்னெடுக்கலாம் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.