Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடும் கண்டனம்!!

ஐக்கிய அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடும் கண்டனம்!!

5 வைகாசி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 1318


மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றநிலையின் பின்னணியில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, ஐக்கிய அமீரக நாட்டின் குடிமக்கள் பயன்பாட்டு அடிப்படை கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாக்குதல்கள் பிராந்தியத்தில் நிலவும் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், இது சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இவ்விவகாரத்தில் பிரான்ஸ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், நீடித்த தீர்வுக்காக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து சர்வதேச கடல் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பிராந்திய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வலுவான ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் அணு, ஏவுகணை மற்றும் பிராந்தியத்தில் நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக சரியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படுவது அவசியம் எனவும் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.