Paristamil Navigation Paristamil advert login

தமிழக தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக; கவர்னருக்கு விஜய் கடிதம்

தமிழக தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக; கவர்னருக்கு விஜய் கடிதம்

5 வைகாசி 2026 செவ்வாய் 06:08 | பார்வைகள் : 1942


தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.  த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ததேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் வலியுறுத்தி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க  விஜய் 14 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளார்.