மக்ரோனின் அன்டோராவுக்கான பயணத்தின் போது, "துப்பாக்கிகளை" வைத்திருந்த நிலையில் ஒருவர் கைது!!
4 வைகாசி 2026 திங்கள் 22:11 | பார்வைகள் : 242
Emmanuel Macron அவர்களின் Andorra பயணத்தின் போது, 48 வயதுடைய ஒரு பிரெஞ்சு நபர் “இரண்டு நீளமான ஆயுதங்களுடன்” இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஏப்ரல் 27 அன்று Pas de la Casa பகுதியில் நடைபெற்றது.
அதிகாரிகளுக்கு வந்த தகவலின் அடிப்படையில், அந்த நபர் Encamp நகரில் தங்கியிருந்தபோது இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தார் என்று கூறப்பட்டது. பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக சந்தேகித்து, அவர் காவலில் வைக்கப்பட்டார்.
பின்னர் காவல்துறை விசாரணையில், அவை உண்மையான ஆயுதங்கள் அல்லாமல் மாற்றப்படாத போர்க்கால ஆயுதங்களின் நகல்கள் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த நபர் பிரான்ஸ் காவல்துறையினருக்கு முன்பே அறிமுகமானவர் என்றும் தெரியவந்தது.
இம்மானுவேல் மக்ரோனின் வருகைக்காக முதலில் திட்டமிடப்பட்டிருந்த தேதியான கடந்த அக்டோபர் மாதமும் அவர் அன்டோராவுக்குப் பயணம் செய்திருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan