பெங்களூரு அணிக்கு பேரிடி- தாயகம் திரும்பும் முக்கிய வீரர்
4 வைகாசி 2026 திங்கள் 15:02 | பார்வைகள் : 197
விரல் காயத்தால் விலகிய பெங்களூரு அணி வீரர் பிலிப் சால்ட் இங்கிலாந்திற்கு திரும்பினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரரான பிலிப் சால்ட் (Philip Salt), கடந்த மூன்று போட்டிகளில் விலகியிருந்தார்.
விரல் காயத்தினால் அவர் விளையாடவில்லை என்று அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காயத்திற்கு பரிசோதனை செய்துகொள்வதற்காக பிலிப் சால்ட் (Philip Salt) இங்கிலாந்திற்கு திரும்பியுள்ளார்.
அவரது காயத்தின் தன்மை குறித்து RCB அணி நிர்வாகம் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
எனினும், இந்தத் தகவலின் மூலம் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஜேக்கப் பெத்தலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிலிப் சால்ட் 168.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 202 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவரது இழப்பு பெங்களூரு அணி பின்னடைவை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan