பிரிவினை மற்றும் ஊடுருவல் - குறிவைக்கும் புதிய சட்ட முன்மொழிவு!
4 வைகாசி 2026 திங்கள் 13:24 | பார்வைகள் : 218
உள்துறை அமைச்சர் லோரன் நுனெஸ் (Laurent Nuñez), தற்போது அரசின் சட்டவாக்கல் ஆலோசனை மையமான Conseil d’État‑இல் பரிசீலனையில் உள்ள அரசின் புதிய சட்ட முன்மொழிவை விளக்கினார்.
இந்த சட்டம், முன்னாள் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ (Bruno Retailleau) முன்வைத்துள்ள உரையை விட விரிவானது.
அது இஸ்லாமிய ஊடுருவல் மட்டும் அல்ல, எல்லா வகையான பிரிவினை மற்றும் ஊடுருவலையும் (Entrisme) குறிவைக்கும்.
“தீவிரவாதம், பிரிவினை, வன்முறை தீவிரவாதம் - இப்போது ஊடுருவலை எதிர்க்கிறோம்”
என ஊடகங்களிற்கு அளித்த செவ்வியில் நுனெஸ் கூறினார்:
«நாம் தீவிரவாதத்தையும், பிரிவினையையும், வன்முறை தீவிரவாதத்தையும் கையாண்டோம் . ஊடுருவலையும் எதிர்க்கிறோம்.»
புரூனோ ரத்தையோவின் உரை ஒரு “முழுமையற்ற வேலை” எனவும் லோரன் நுனெஸ் குறிப்பிட்டார்.
அரசின் உரை - குறிவைக்கும் குழுக்கள்
பிரிவினை அமைப்புகள்
மிகுந்த வன்முறை குழுக்கள் (ultra‑droite)
வெறுப்பு, பாகுபாடு, வன்முறைக்கு தூண்டும் அமைப்புகள்
குடியரசுக்கு எதிரான நோக்கத்துடன் செயல்படும் நபர்கள்
“மிகவும் பரவலான, வெளிப்படையாக தெரியாத நடத்தை”
«பிரான்சில் இஸ்லாமுடன் எனக்கு பிரச்சினை இல்லை.»
«ஆனால் மதத்தை தவறாக பயன்படுத்தி குடியரசு மதிப்புகளை பாதிப்பவர்களை எதிர்க்கிறேன்.»
வெளிப்படையான பிரிவினை இல்லை
குடியரசு விதிகளை ஏற்றுக்கொண்டது போல நடிப்பு
ஆனால் உள்ளே நுழைந்து கட்டுப்பாட்டை எடுக்கும் திட்டம்
மதச்சட்டத்தை திணிக்க முயற்சி
அழுத்தம், மிரட்டல், ஏமாற்று நடைமுறைகள்
என குறிப்பிட்ட லோரன் நுனெஸ் மேலும்,
«தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது செய்யலாம். ஆனால் பொது சேவைகள் உங்கள் மத விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கோர முடியாது.»
எனவும் தெரிவித்தார்.
சட்ட முன்மொழிவில் உள்ள முக்கிய நடவடிக்கைகள்
1. சங்கங்களை கலைக்கும் புதிய காரணம் — “entrisme”
பொதுவிதிகளை மீறி, மத அல்லது பிற கோட்பாடுகளை முன்னிறுத்தும் அமைப்புகள் குறிவைக்கப்படும்.
2. வெளிநாட்டில் இருந்து செயல்படும் அமைப்புகளைத் தடைசெய்தல்
பிரான்சில் கலைக்கப்பட்டு வெளிநாட்டில் மீண்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள் (உதா: Collectif contre l’islamophobie en France).
3. கலைக்கப்பட்ட சங்கங்களுக்கு “liquidateur” நியமனம்
சொத்துகள் அதே நோக்கத்துடன் உள்ள மற்ற அமைப்புகளுக்கு செல்லாமல் தடுக்க.
4. இளைஞர்களுக்கு ஆபத்தான வெளியீடுகளுக்கு எதிரான நடவடிக்கை
வெறுப்பு, பாகுபாடு, வன்முறையை ஊக்குவிக்கும் புத்தகங்கள் மீது தடை
தடை செய்யும் காலக்கெடு 1 ஆண்டிலிருந்து 3 ஆண்டாக நீட்டிப்பு
அரசு குறுகிய காலத்திலேயே தடை விதிக்க முடியும் (உதா: ஒழுக்கவியல் எதிர்ப்பு, மறுப்பு கருத்துகள் உள்ள புத்தகங்கள்)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan