அதிக பயணியர் பயன்படுத்திய விமான நிலையங்கள் முதலிடத்தில் சென்னை
4 வைகாசி 2026 திங்கள் 06:14 | பார்வைகள் : 1646
கடந்த நிதியாண்டில், சென்னை விமான நிலையத்தை, 2.3 கோடிக்கும் அதிகமான பயணியர் பயன்படுத்தியுள்ளனர். இரண்டாமிடத்தில் கோவை உள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கடந்த நிதியாண்டில், விமான நிலையங்களை பயன்படுத்திய பயணியர், சரக்கு போக்குவரத்து, விமான போக்குவரத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், அதிக பயணியர் பயன்படுத்திய, 'டாப்-6' விமான நிலையங்களை அறிவித்துள்ளது.
அதில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இரண்டு கோடியே, 30 லட்சத்து, 17 ஆயிரத்து, 324 பயணியர் பயன்படுத்தியுள்ளனர். இது, முந்தைய நிதியாண்டை காட்டிலும், 2.7 சதவீதம் அதிகம். இரண்டாமிடத்தில் உள்ள கோவை விமான நிலையத்தை, 32 லட்சத்து, 20 ஆயிரத்து, 745 பேர் பயன்படுத்தியுள்ளனர்; இது, முந்தைய ஆண்டை காட்டிலும், 5,2 சதவீதம் அதிகம்.
கோவை விமான நிலையத்தில், கடந்த நிதியாண்டில், 22 ஆயிரத்து, 462 முறை, விமானங்கள் வந்து சென்றுள்ளன. மொத்தம், 34.20 லட்சம் பயணியர் பயன்படுத்தி உள்ளனர். சர்வதேச சரக்குகள், 1,908 மெட்ரிக் டன் மற்றும் உள்நாட்டு சரக்குகள், 11 ஆயிரத்து, 268 டன் என, 13 ஆயிரத்து, 176 டன் சரக்கு கையாளப்பட்டுள்ளதாக, இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan