ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த விபத்து - விசாரணையின் விபரங்கள்!
2 வைகாசி 2026 சனி 21:50 | பார்வைகள் : 2948
Ardèche மாகாணத்தில் மே 1 வெள்ளிக்கிழமை, 17 முதல் 20 வயதுள்ள ஐந்து இளைஞர்கள் மகிழுந்து சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து தீப்பற்றி உயிரிழந்தனர்.
ஆரம்ப விசாரணைகள், விபத்துக்கான காரணம் “அதியுச்ச வேகம்" எனத் தெரிவித்துள்ளன.
பிற்பகலில், Rhône மாகாணத்தைச் சேர்ந்த பத்து இளைஞர்கள், இரண்டு மகிழுந்துகளில், நீராடும் இடம் தேடி Sarras – Vernosc‑lès‑Annonay இடையே பயணம் செய்தனர்.
அதில் ஒரு மகிழுந்து சாலையிலிருந்து விலகி, சுமார் 25 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது. பின்னர் தீப்பற்றியது. மாகாண ஆட்சியர் இதை உறுதிப்படுத்தினார்.
17 முதல் 20 வயதுள்ள நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண்
இரண்டாவது மகிழுந்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புக்குழுவை அழைத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்தபோது மகிழுந்து முழுவதும் தீயில் எரிந்திருந்தது. உள்ளே ஐந்து எரிந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சாவடைந்தவர்கள்
2006 முதல் 2009 வரை பிறந்தவர்கள். இதில்நான்கு ஆண்கள், ஒரு பெண் அடக்கம்.
மொத்தம் 42 தீயணைப்பு வீரர்கள், அதில் நீர்மூழ்கிக் குழுவும் மலையேறும் குழுவும், நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மருத்துவ‑சட்ட விசாரணைகளும் நச்சுப் பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன.
RD 270 சாலை நாள் முழுவதும் மூடப்பட்டது.
முதல் சாட்சியங்களின் அடிப்படையில், விபத்துக்குள்ளான மகிழுந்தின் ஓட்டுநர் அதிக வேகத்தில், இறுக்கமான மற்றும் வளைந்த சாலையில் சென்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan