வணிக மையங்களில் வன்முறைகள் இல்லை -பிரதமர்!
1 வைகாசி 2026 வெள்ளி 21:07 | பார்வைகள் : 2575
மே 1 தொழிலாளர் தினத்தன்று திறந்திருக்கும் அருகாமை வணிகங்களில் காவல்துறை மற்றும் தொழிலாளர் கண்காணிப்புகள் நடத்தப்பட்டதாகவும், «எந்த வன்முறைச் சம்பவமும் எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை» எனவும் பிரதமர் செபஸ்தியோன் லூகோர்னு (Sébastien Lecornu) சில செய்தியாளர்களிடம், தெரிவித்தார்.
அவர் மேலும்,
«கண்காணிப்புகள் சாதாரணமானவை. சிறப்பாக, பணியாளர்கள் தன்னார்வமாக வேலை செய்ய வேண்டும் — இது பேச்சுவார்த்தைக்குரிய விஷயம் அல்ல» என தெரிவித்தார்.
அவர் Haute‑Loire பயணத்திலிருந்து திரும்பியபோது இந்த கருத்துகளை தெரிவித்தார். அங்கு அவர் ஒரு மலர்கடை மற்றும் ஒரு வெதுப்பகத்தை (boulangerie) பார்வையிட்டார்.
கண்காணிப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
சட்ட குழப்பத்தையும் மீறி திறக்க அனுமதி
பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் வெதுப்பகம் மற்றும் மலர்கடைகள், மே 1 அன்று திறக்கலாம், எனஅரசு முன்பே அறிவித்திருந்தது என்றாலும், இந்த அனுமதி சட்ட ரீதியான குழப்பம் நீடித்திருந்த நிலையிலும் வழங்கப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan