Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளை பிடிக்க இந்தியா தீவிரம்

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளை பிடிக்க இந்தியா தீவிரம்

2 வைகாசி 2026 சனி 10:36 | பார்வைகள் : 302


இன்டர்போல் அமைப்புடன் இணைந்து இந்திய பாதுகாப்பு படையினர், வெளிநாடுகளில் தலைமறைவாக வாழும் குற்றவாளிகளை பிடிக்கும் பணியை  துரிதப்படுத்தி உள்ளனர்.  இந்நடவடிக்கைக்கு ' ஆப்பரேஷன் குளோபல் ஹன்ட்' என்ற பெயர்  சூட்டப்பட்டு உள்ளது.

பிரபல தாதா நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா துருக்கியில் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று முன்தினம் துருக்கி அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியது.  இவர், வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை  ஏற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்டர்போல் அமைப்புடன் வெளிநாடுகளில் பதுங்கி உள்ள  குற்றவாளிகளை நாடு கடத்தும் பணிகளில்  இந்திய விசாரணை அமைப்புகள் மும்முரமாக உள்ளன. இதற்காக அந்த அமைப்பின் மாநாட்டில் அதற்கான கட்டமைப்பு வகுக்கப்பட்டது. ஆப்பரேஷன் குளோபல் ஹன்ட் என பெயர் சூட்டப்பட்ட இந்த திட்டத்தின்படி, இன்டர்போல் உதவியுடன் வெளிநாடுகளில் தப்பியோடியவர்களை கண்டுபிடித்துகைது செய்வதும், அந்நாட்டு அரசிற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த, சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வருவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சர்வதேச  போதைப்பொருள் கும்பல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு இந்நடவடிக்கையில் இலக்கு வைக்கப்பட்டு உள்ளது.இதன் ஒரு பகுதியாக  தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சலீம் டோலா, துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டு உள்ளார். போதைப்பொருள் - பயங்கரவாத அமைப்புகளை நடத்தி வருபவர்கள், வெளிநாட்டி் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் விநியோகத்தை ஒருங்கிணைத்து வருவதை விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.இந்த கும்பல்களை இயக்குபவர்கள் என11 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

ஆசிப் இக்பால் மெமன்
ஹஸ்ரா இக்பால் மெமமன்ஜூனைத் இக்பால் மெமன்
ஹர்மீத் சிங்
பிரதீப் சிங்
பரம்ஜித் தலிவால்
சன்னி கோசல்விஸ்
ஜஸ்விந்தர் சிங்
தைஷான் பிஷ்னோய்
ஹாலி சலீம்
சந்திப் துனியா

ஆகியோர் முக்கியமானவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர்களில் ஜஸ்விந்தர் சிங் மற்றும்  சன்னி கல்ரா என்பவர்கள் துபாய் போலீசிடம் சிக்கி உள்ளனர்.