பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரம் - 2 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது
1 வைகாசி 2026 வெள்ளி 19:55 | பார்வைகள் : 1787
பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் 2 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29.04.2026 இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா உட்பட ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் மோசமான செயலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணி, கொழும்பின் நாரஹேன்பிட்டா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.
அதே ஹொட்டலில் தங்கியிருந்த பெண்கள் சிலர், தாங்கள் குளியலறையை பயன்படுத்திய போது யாரோ தங்களை ரகசியமாக படம் பிடித்ததாக புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இரு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
உடனடியாக இரு வீரர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, இலங்கை மதிப்பில் ரூ.5 லட்சத்திற்கு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மீண்டும், இருவரும் மே 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ளனர்.
அடுத்ததாக தேசிய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள இந்த வீரர்கள் இப்படியான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan