ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் பல கோடி வருமானத்தை ஈட்டும் கோலி
1 வைகாசி 2026 வெள்ளி 17:50 | பார்வைகள் : 210
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பிசிசிஐ ஊதியம், ஐபிஎல் ஒப்பந்தம், பூமா, ஆடி போன்ற பிரண்ட்களுடன் ஒப்பந்தம், நிறுவனங்களில் முதலீடு என ஆண்டுக்கு பல கோடிகளை குவித்து வருகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமும் விராட் கோலி கணிசமான வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஹப் வெளியிட்ட அறிக்கைகளின்படி, விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரப்பதிவுக்கு ரூ.12 கோடி பெறுவது தெரிய வந்துள்ளது.
மேலும், எக்ஸ் தளத்தில் ஒரு விளம்பரப்பதிவு இடுவதற்கு ரூ.2.5 கோடி வருமானம் பெறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவரை 276 மில்லியன் பேரும், எக்ஸ் தளத்தில் 67 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.
இதன் மூலம், ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் மூன்றாவது அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக கோலி உள்ளார்.
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரப்பதிவுக்கு ரொனால்டோ ரூ.27 கோடியும், மெஸ்ஸி 22 கோடியும் வருமானம் பெறுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan