'அஜித் 64' படத்தின் அறிவிப்பு வெளியாகாதது ஏன்?
1 வைகாசி 2026 வெள்ளி 16:41 | பார்வைகள் : 366
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் பிறந்தநாள் இன்று. அதை முன்னிட்டு அவரது அடுத்த படமான 'அஜித் 64' படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி ஒரு அறிவிப்பு இன்று வெளியாகவில்லை.
அஜித் கடைசியாக நடித்த 'குட் பேட் அக்லி' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அடுத்த படத்தை உடனே ஆரம்பிக்காமல் அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதிலேயே இருக்கிறார். அது அவரது சினிமா ரசிகர்களுக்கு வருத்தம்தான்.
இதனிடையே, அஜித் 64 படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறி அதில் தனது எதிர்பார்ப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
“என் அன்புள்ள சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்து, இந்தியாவை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள்தான் தேசத்தின் மிகப்பெரிய பெருமை. எங்கள் பத்ம பூஷன், உங்கள் கருணையையும் அன்பையும் பெறுவதற்கு நான் எப்போதும் அதிர்ஷ்டசாலியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். உங்களைச் சந்தித்த அந்த நாளுக்கும், உங்களுடன் பணியாற்றியதற்கும், 'குட் பேட் அக்லி' உடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எல்லாமே நம்ப முடியாததாக உணர்கிறேன். இன்னும் பல சிறப்பான நினைவுகளை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan