Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணை நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்காது – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பு!!

ஹோர்முஸ் நீரிணை நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்காது – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பு!!

17 பங்குனி 2026 செவ்வாய் 17:32 | பார்வைகள் : 3113


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை பகுதியை பாதுகாக்க உதவி வழங்குமாறு பிரான்ஸிடம் வலியுறுத்திய நிலையில், இன்று 17ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இராணுவ நடவடிக்கைகளில் பிரான்ஸ் பங்கேற்காது என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவின் கோரிக்கைக்கு நேர்மறையான பதில் அளிக்க பிரான்ஸுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச அரசியல் நிலவரத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஆயினும், நிலைமை “அமைதியாகும்” பட்சத்தில், கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் மட்டும் பிரான்ஸ் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதி மக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.