இலங்கைக்கு வந்தடைந்த எரிபொருள் கப்பல்
17 பங்குனி 2026 செவ்வாய் 17:22 | பார்வைகள் : 1320
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.
இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan