இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி
17 பங்குனி 2026 செவ்வாய் 16:31 | பார்வைகள் : 1007
இலங்கையில் மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு ஏற்கனவே வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்னும் இரண்டு நாட்களில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு எதிர்பார்க்கப்படுவதாக விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்தபோதிலும், இத்துறையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று சந்தைக்கு போதிய கையிருப்புகளை வெளியிடாத காரணத்தால், அதிகாரிகள் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், அடுத்த கப்பல் நாளை அல்லது வியாழக்கிழமை வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan