Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் மறு தணிக்கை ரத்து

ஜனநாயகன் மறு தணிக்கை  ரத்து

17 பங்குனி 2026 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 361


வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் 'ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தணிக்கை பிரச்னையில் படம் சிக்கி கோர்ட் வரை சென்றதால் படம் வெளியாகவில்லை.

பின்னர் இந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதையடுத்து, மார்ச் 9ம் தேதி சென்னையில் ‛ஜனநாயகன்' படத்தின் மறு தணிக்கை நடக்க இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட கடைசி நேரத்தில் ரத்தானது.

இந்நிலையில் ரத்தான அந்த மறு தணிக்கை இன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மறு தணிக்கை நடக்கவில்லை. மும்பை அல்லது ஆந்திராவில் இருந்து சிறப்பு தணிக்கை குழுவினர் படத்தை பார்ப்பதாக சொன்னார்கள். ஆனால் இன்று படக்குழுவுக்கு அழைப்பு சென்சார் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். தற்போதைய சூழலில் படம் எப்போது மறு தணிக்கைக்கு வருகிறது என்பதே தெரியவில்லை என்கிறார்கள்