Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானின் காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் - 400 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் - 400 பேர் பலி

17 பங்குனி 2026 செவ்வாய் 05:45 | பார்வைகள் : 1283


ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 250 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செயல் மனிதபிமானம் அற்ற செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.