திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்
17 பங்குனி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 929
திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: உழைப்பை அள்ளிக்கொடுங்கள், உதயசூரியன் உதிக்கட்டும். வீடுதோறும் திராவிட மாடலின் சாதனைகள் சென்றடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள். அரணென அனைவருக்குமான தமிழகத்தை காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல்.
இதுதான் தி.மு.க.. ஏப்ரல் 23 அன்று, தமிழக மக்கள் தங்கள் ஓட்டுக்களை உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan