ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை - ஈரான் வெளியிட்ட புதிய தகவல்
16 பங்குனி 2026 திங்கள் 09:20 | பார்வைகள் : 1407
ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாக ஈரான் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் பாதுகாப்பு படை அதிரடியாக முடியது.
உலகின் 20% எரிசக்தி விநியோகத்தின் பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி இருக்கும் நிலையில், அது மூடப்பட்டதால் உலக அளவிலான எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் தங்களது போர் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க எதிரி நாடுகளின் கப்பல்களுக்கும், அதன் நெருங்கிய நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது. மற்ற நாடுகள் இந்த ஜலசந்தியை சுகந்திரமாக கடந்து செல்லலாம் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடவில்லை, உண்மையில் அது திறந்தே உள்ளது.
உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல கப்பல்கள் இந்த பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். உண்மையில் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அராக்சி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இந்தியா நோக்கி வந்த 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan