Paristamil Navigation Paristamil advert login

முன்மாதிரியாக திகழும் தலைவர் மோடி; ஆஸி., முன்னாள் பிரதமர் புகழாரம்

முன்மாதிரியாக திகழும் தலைவர் மோடி; ஆஸி., முன்னாள் பிரதமர் புகழாரம்

14 பங்குனி 2026 சனி 04:59 | பார்வைகள் : 253


பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து இந்தியா சார்பில் நடத்தப்பட்டு வரும் ரைசினா மாநாடு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; டில்லியில் 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ரைசினா மாநாடு,  சுவிட்சர்லாந்தின் டாவோஸ் மற்றும் சீனாவின் போவாவ் மாநாடுகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  ஏனெனில், இந்த மாநாட்டில் அரசியல் ரீதியாக பலம் படைத்தவர்கள் யாரும் ஆதிக்கம் செலுத்தப்படுவதில்லை. அதேவேளையில், இந்த மாநாட்டை நடத்தும் அரசையும் புகழ்ந்து பாடவில்லை.

ஒவ்வொரு மாநாட்டிலும் பிரதமர் மோடி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவர் தொடக்க அமர்வில் கலந்துகொண்டு முதன்மை உரையைக் கேட்கிறார். ஆனால் அவர் பேசுவதில்லை. அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்குப் பிறகு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக அவர் இருக்கலாம். இருப்பினும் தலைமை தாங்குவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் பண்பையும் அவர் கொண்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோதிலும், அதிகார மமதை அவரிடம் இல்லை.

பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள், துடிப்பான ஊடகங்கள் மற்றும் வலுவான சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும் சர்வாதிகார போக்கு இருக்காது. மேலும், எந்தவொரு சர்வாதிகார நாடும் எதைப் பற்றியும் விவாதிக்கத் தடையில்லாத ஒரு மாநாட்டை நடத்தாது. இதற்கு உதாரணமாக, இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரும், ஈரான் துணை வெளியுறவு அமைச்சரும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தது தான், இவ்வாறு அவர் கூறினார்.