சுவிட்சர்லாந்து திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து - 06 பேர் பலி
11 பங்குனி 2026 புதன் 08:39 | பார்வைகள் : 335
சுவிட்சர்லாந்து பிரிபொங் மாகாணம், கெர்சர் நகரில் 10.03.2026 மாலை பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் சென்றுகொண்டிருந்த பேருந்தானது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தீயானது விரைவாக பேருந்து முழுவதிலும் பரவியதால் பயணிகளால் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த 11 பயணிகளில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயமுற்றவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தில் திடீரென தீப்பற்றியதன் பின்னணியைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan