Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு - வெளியான உண்மையான காரணம்

இலங்கையில்  எரிபொருள் விலை உயர்வு - வெளியான உண்மையான காரணம்

10 பங்குனி 2026 செவ்வாய் 15:01 | பார்வைகள் : 256


இலங்கையில்  எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"பொதுவாக முந்தைய மாதத்தின் விலைகளை சரிசெய்தே நாங்கள் விலைகளை அதிகரிக்கிறோம். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக இருந்தபோதிலும், அடுத்த மாதத்திற்காக வரும் கப்பல்களின் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்து வருகின்றது. எனவே, தற்போதுள்ள இருப்புகளைப் பாதுகாத்து, விலையை சமநிலைப்படுத்த நாங்கள் எதிர்பார்த்தோம்.

அதன்படி, எரிபொருள் விலைகள் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் உயர்வதைத் தவிர்க்கவும், இருக்கும் இருப்புகளை மாதங்களுக்கு இடையில் கவனமாகப் பகிர்ந்து பயன்படுத்தவும் விலையை சமநிலைப்படுத்தினோம். எரிபொருள் பதுக்கல் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்துவதுடன், வரிசைகள் உருவாகாமல் பொதுமக்கள் நீண்ட காலத்திற்கு ஒரே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால், அடுத்த சில நாட்களில் நிச்சயமாக எமது எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு இணங்க, கடந்த மார்ச் முதலாம் திகதி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலைகளைத் திருத்திய போதிலும், அதிலிருந்து 9 நாட்களின் பின்னர் நேற்று (09) இரவு மீண்டும் அனைத்து எரிபொருட்களினதும் விலைகளை அதிகரித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைப் பட்டியல்:

ஒக்டேன் 92 பெட்ரோல்: 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 317 ரூபா.

ஒக்டேன் 95 பெட்ரோல்: 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 365 ரூபா.

லங்கா வெள்ளை டீசல்: 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 303 ரூபா.

லங்கா சுப்பர் டீசல்: 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 353 ரூபா.

மண்ணெண்ணெய்: 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 195 ரூபா.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026