Paristamil Navigation Paristamil advert login

திடீரென ரஷ்ய ஜனாதிபதி புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்! காரணம் என்ன..?

திடீரென  ரஷ்ய ஜனாதிபதி புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!  காரணம் என்ன..?

10 பங்குனி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 876


இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஈரான் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை திங்கட்கிழமை தொலைபேசியில் பேசிக் கொண்டு ஈரான் தொடர்பான நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களைப் பற்றி விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை புடினின் உதவியாளரான யூரி உஷாகோவ் வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த உரையாடல், இந்த ஆண்டில் இரு தலைவர்களுக்கிடையே நடந்த முதல் தொலைபேசி பேச்சு என கூறப்படுகிறது.

அதன்போது, ஈரான் தொடர்பான மோதலை அரசியல் மற்றும் தூதரக வழிகளில் விரைவாக தீர்க்க வேண்டும் என புடின் கருத்துக்களை முன்வைத்ததாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ட்ரம்ப், ஈரான் தொடர்பான நிலைமை குறித்து தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி, ஈரானுக்கு அமெரிக்க படைகள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் பற்றிய புலனாய்வு தகவல்களை ரஷ்யா வழங்கி வருகிறது என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இந்த தொலைபேசி உரையாடலில் பேசப்பட்டதா என்பது குறித்து உஷகோவ் எந்த தகவலை வெளியிடவில்லை.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026