Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் புதிய உச்ச தலைவரை விமர்சித்த டிரம்ப்!

ஈரானின் புதிய உச்ச தலைவரை விமர்சித்த டிரம்ப்!

9 பங்குனி 2026 திங்கள் 11:23 | பார்வைகள் : 1122


ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஒரு தகுதியற்றவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வர்ணித்திருந்தார்.

ஈரானின் தலைமைத்துவத் தெரிவில் அமெரிக்காவிற்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப், விரும்பியிருந்தார்.

"ஈரானின் எதிர்காலத்தை ஈரானே தீர்மானிக்கும், எந்தவொரு வெளிநாடும் இதில் தலையிட முடியாது" என்ற செய்தியை இந்த நியமனம் மூலம் ஈரான் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

அதேவேளை ஈரானின் அனைத்து முக்கிய அரச மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் மொஜ்தபா கமேனிக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

புரட்சிகர காவல் படை, ஆயுதப் படைகள் மற்றும் பசிஜ் துணை இராணுவப் படை, ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைச்சகங்கள் என்பன ஆதரவை வழங்கியுள்ளன.

ஈரானை நிலைகுலையச் செய்ய நினைக்கும் சக்திகளுக்கு, நாடு பிளவுபடவில்லை மாறாக ஒற்றுமையுடன் இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு சான்றாக இந்த ஆதரவு பார்க்கப்படுகிறது. ஈரானிய மக்கள் தங்கள் புதிய உச்ச தலைவரைக் காணவும், அவரது உரையைக் கேட்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதேவேளை இதுவரை மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவோ அல்லது நாட்டு மக்களுக்கு உரையாற்றவோ இல்லை. தற்போதுள்ள மிக நெருக்கடியான போர்ச் சூழலில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ரகசியமான இடத்தில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளையில், மக்களுடன் தொடர்புகொள்வதில் உள்ள தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சவால்களே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவதாகவும் அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.