முதல் முறையாக தொடர் நாயகனான சஞ்சு சாம்சன்
9 பங்குனி 2026 திங்கள் 11:17 | பார்வைகள் : 1053
உலகக்கிண்ணத்தை வென்றதை ஒரு கனவு போல் உணர்கிறேன் என்று சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக கைப்பற்றியது.
இப்போட்டியில் 46 பந்துகளில் 89 ஓட்டங்கள் (8 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசிய சஞ்சு சாம்சன் (Sanju Samson) தனது முதல் டி20 உலகக்கிண்ண தொடர் நாயகன் விருதை பெற்றார்.
சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் 3 அரைசதங்களுடன் (97, 89, 89) 321 ஓட்டங்கள் குவித்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய அவர், "இது ஒரு கனவு போல் உள்ளது. உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாகவும், வார்த்தைகளால், உணர்ச்சிகளால் நான் நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன். மிகவும் நேர்மையாக சொல்லப்போனால், இது ஒன்று முதல் இரன்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று நினைக்கிறேன்" என்றார்.
மேலும் அவர், "நான் மேற்கிந்தியத் தீவுகளில் 2024 உலகக்கிண்ணத்தை வென்ற அணியுடன் இருந்தபோது, என்னால் ஒரு போட்டியை கூட விளையாட முடியவில்லை. நான் கனவு காண்பதை தொடர்ந்து காட்சிப்படுத்தினேன். நான் தொடர்ந்து வேலை செய்தேன்; உழைக்க வேண்டும் என்று நினைத்தேன். இதைத்தான் அடைய விரும்பினேன். மேலும் கடவுளின் கிருபையால் இன்று விடயங்கள் தலைகீழாக மாறிவிட்டன என்று நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan